/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டில் பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
/
வீட்டில் பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
ADDED : ஆக 15, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்., நாச்சிகழுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 41. விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் தனது வீட்டில் இருந்தார்.அப்போது கடவூர் யூனியன், வீரணம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 28, என்பவர் வீட்டில் நுழைந்து பித்தளை பானை, பித்தளை குடம் ஆகியவற்றை திருடிச் செல்ல முயற்சி செய்தார்.
பழனிசாமி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ரஞ்சித்குமாரை பிடித்து தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். பின், பழனிசாமி கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து, குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனர்.