ADDED : ஜூலை 21, 2025 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குபாளையத்தில் ஏரிக்கரை அருகே, நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது.
அதில் ஈடுபட்டிருந்த கருக்குப்பாளையம்தெற்குதெரு விக்னேஷ், 29, ராசு, 45, வினோத், 29, உட்பட பத்து பேரை கைது செய்தனர். இரண்டு சேவல் மற்றும் 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.