/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 04, 2025 01:39 AM
குளித்தலை, குளித்தலை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே, கிருஷ்ணன் மகன் கார்த்திக், 36, வசித்து வருகிறார். இவர், விவசாயி கூலி தொழிலாளி. மனைவி சண்முகநதியா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தனது குடும்பத்துடன் மாமியார் வீடான, இரும்பூதிபட்டிக்கு நேற்று முன்தினம் கார்த்திக் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த
போது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த, இரண்டு லட்சம் ரூபாய், 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் புஷ்பகனி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கரூரிலிருந்து எஸ்.ஐ.. சரண்யா தலைமையிலான வந்த போலீசார், கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடப்பட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாலாபேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களின் பதிவுகளை வைத்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.