ADDED : ஏப் 13, 2026 03:06 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட, நான்கு தொகுதிகளில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும் துண்டு பிரசுரங்கள், பேரணி, கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் கோலப்போட்டி நடந்தது.
திட்ட இயக்குநர்(மகளிர்த்திட்டம்) தனசேகரன் தொடங்கி வைத்தார். பின், மாநகராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் இணைந்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
