/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்
/
முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்
முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்
முள்செடிகளை அகற்றும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்
ADDED : நவ 13, 2025 03:37 AM
கிருஷ்ணராயபுரம்: வரகூர் முதல் சரவணபுரம் வரையிலான சாலையோரம் முள் செடிகளை, அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூரில் இருந்து சரவணபுரம் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பலர் வாகனங்களில் செல்கின்றனர். சாலையோரம் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுவதால் நமது நாளிதழில் செய்து வெளியானது.இதையடுத்து, சாலையில் வளர்ந்த முள் செடிகளை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.