/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை
/
ஆடி மாதத்தையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 28, 2025 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கொசூரில், விநாயகர், பாம்பலம்மன், குள்ளாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, இக்கோவிலில் முதலாமாண்டு, 1,008 திருவி-ளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக, காவிரியில் கோவில் பூசாரிகள், விழா கமிட்டியினர் புனித நீராடினர். பின், தீர்த்-தக்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். கடந்த, 25 காலை கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 1,008 பெண்கள் குத்துவி-ளக்கேற்றி, குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்-பட்டது.

