/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விராலிமலை திருமுருகன் கோவிலில் 108 காவடி தீர்த்தக்குட யாத்திரை
/
விராலிமலை திருமுருகன் கோவிலில் 108 காவடி தீர்த்தக்குட யாத்திரை
விராலிமலை திருமுருகன் கோவிலில் 108 காவடி தீர்த்தக்குட யாத்திரை
விராலிமலை திருமுருகன் கோவிலில் 108 காவடி தீர்த்தக்குட யாத்திரை
ADDED : மே 08, 2024 05:27 AM
குளித்தலை : குளித்தலை, கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து நேற்று காலை, 53 வது ஆண்டாக விராலிமலை திருமுருகன் கோவிலுக்கு, 108 காவடி மற்றும் பால்குடம், தீர்த்தக்குட யாத்திரை மேளதாளங்கள் முழங்க புறப்பட்டது.
திருச்சி-கரூர் நெடுஞ்சாலை மற்றும் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் வந்த யாத்திரை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சென்று, அங்கிருந்து மணப்பாறை வழியாக விராலிமலை திருமுருகன் கோவிலுக்கு இன்று செல்கிறது. அங்கு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற காவடி, பால்குடம் தீர்த்தக்குடம் யாத்திரையில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.