/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் அவசர சேவைக்கு 12 ஜீப், 5 பைக் வழங்கல்
/
போலீஸ் அவசர சேவைக்கு 12 ஜீப், 5 பைக் வழங்கல்
ADDED : ஆக 26, 2025 01:09 AM
சேலம், சேலம் மாநகரில், போலீசாரின் அவசர சேவைக்காக 12 ஜீப், 5 பைக் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில், பொதுமக்களின் அவசர எண்களான 100 மற்றும் 112ல், வரும் அழைப்புகளை ஏற்று, உடனடியாக உதவி செய்யும் வகையில், தமிழக அரசின் எம்.பி.எப்., திட்டத்தின் கீழ், 12 ஜீப் மற்றும் 5 பைக் வழங்கப்பட்டுள்ளது. அதிவிரைவு நடவடிக்கை குழுவுக்கு 3 ஜீப், அவசர சேவை வாகனங்களாக 4 ஜீப், 5 பைக் ஆகியவை, நேற்று போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர்கள் சிவராமன், கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கேற்ப, செயல்பட வேண்டிய விதம் குறித்து, ஆலோசனை
வழங்கினர்.