/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பங்கேற்ற 1,254 பேர்
/
மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பங்கேற்ற 1,254 பேர்
மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பங்கேற்ற 1,254 பேர்
மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பங்கேற்ற 1,254 பேர்
ADDED : நவ 16, 2025 02:14 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 5 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் நேற்று முதல் தாளில், 1,254 பேர் பங்கேற்றனர்.
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறி-விப்பு, கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்., 10 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்-கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்--1 தேர்வு நேற்று நடந்தது. இரண்டாம் தாள் தேர்வு இன்று நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், முதல் தாள் தேர்வு கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 5 மையங்களில், 1,254 தேர்வர்கள் தேர்வு எழுதினர். இன்று நடக்கும் இரண்டாம் தாள் தேர்வில், 19 மையங்களில், 5,228 தேர்வர்கள் எழுத உள்ளனர். காலை, 9:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் மட்-டுமே அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேல் வந்தவர்கள் அனும-திக்கப்படவில்லை. தேர்வு மையத்தின் வெளியே, நுழைவு சீட் உள்ளவர்கள் மட்டுமே சோதனைக்கு பின், உள்ளே செல்ல அனு-மதிக்கப்பட்டனர்.
தேர்வு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் மற்றும் அவசர தேவைக்கான மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்-கவும், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

