/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
/
கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
ADDED : நவ 16, 2025 02:15 AM
கரூர்:கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், கரூரில் துளசி மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
கேரளா மாநிலம், சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை கார்த்திகை மாதம் துவங்கும் நிலையில், 48 நாட்கள் விரதம் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிவது வழக்கம்.இதனால், கரூர் ஜவஹர் பஜார், பசுபதீஸ்வரர் கோவில் வளா-கத்தில் உள்ள கடைகளில் துளசி மாலை, உத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை ஆகியவை விற்பனை நேற்று ஜோராக நடந்தது. மாலை வகைகள், 50 முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்-யப்படுகிறது.
மேலும் கறுப்பு, காவி, பச்சை நிற வேட்டிகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. 200 ரூபாய்க்கு கலர் வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.