/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.13.17 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூஜை
/
ரூ.13.17 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூஜை
ADDED : நவ 16, 2025 02:15 AM
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், திட்டப்பணி-களை திறந்து வைத்தும் மற்றும் புதிய வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜையும் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பணிகளை தொடங்கி வைத்தார். கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 3.90 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி, பெரிய கோதுாரில், 1.25 கோடியில் சமுதாய கூடம் கட்டும் பணி, திருக்காம்புலியூர் ரவுண்-டானவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்கூடம், 15 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை அமைக்கும் பணி, பெரியகு-ளத்துப்பாளையத்தில், 1.50 கோடியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி என மொத்தம், 13.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கியும், திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

