/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்
/
சபரிமலை பாதயாத்திரை குழுவினர் கரூர் வந்தனர்
ADDED : நவ 15, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, சபரி மலைக்கு செல்லும், பாதயாத்திரை குழுவினர் நேற்று கரூர் வந்தனர்.
தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தில் இருந்து கடந்த, 17ல், 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குழு இருமுடி ஏந்தி, பாத யாத்திரையாக, கேரளா மாநிலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், நேற்று குருசாமி வேணு கோபால் தலைமையில், கரூர் வந்தனர்.
பிறகு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் ஓய்வெ-டுத்த ஐயப்ப பக்தர்கள், மீண்டும் சபரிமலைக்கு பாத யாத்திரை-யாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் வரும், 23ல் சபரிமலைக்கு செல்ல உள்ளனர்.

