ADDED : நவ 13, 2026 06:41 AM
கரூர்:மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும், 15-ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடக்கிறது என, கலெக்டர் பிரசன்னா ராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை
மினி மாரத்தான் போட்டி, ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் வரும் 15-ம் தேதி
காலை, 7:00 மணிக்கு கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 17
வயது முதல் பெண்களுக்கான போட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி,
கலெக்டர் அலுவலகம், வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானா வரை சென்று மீண்டும்
மைதானத்தை வந்தடையும் வகையில், 5 கி.மீ. துாரம் நடத்தப்படுகிறது.
அதேபோல்,
17 முதல் 25 வயது வரையிலான ஆண்களுக்கான போட்டி, மைதானத்திலிருந்து
கலெக்டர் அலுவலகம், வெங்ககல்பட்டி பாலம், லிட்டில் பிளவர் பள்ளி ஆர்ச் வரை
சென்று திரும்பும் வகையில், 8 கி.மீ. துாரம் நடக்கிறது. 25 வயதுக்கு
மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி, மைதானத்திலிருந்து கலெக்டர் அலுவலகம்,
வெங்ககல்பட்டி பாலம், லிட்டில் பிளவர் பள்ளி ஆர்ச், மணவாடி பாரத் பெட்ரோல்
பங்க் வரை சென்று மீண்டும் மைதானத்தை அடையும் வகையில், 10 கி.மீ. துாரம்
நடத்தப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 5,000 முதல் 10,
000 ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்படும். பங்கேற்போர், போட்டி நடைபெறும்
நாளன்று காலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து
கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் பெற, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல
அலுவலரை, 74017 03493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு,
கூறப்பட்டுள்ளது.
