ADDED : நவ 13, 2026 06:41 AM

கரூர்:கரூர்,
சின்ன ஆண்டாங்கோவில் சாலையில், ஸ்டேட் பேங்க் காலனியில் அடிப்படை
வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, பொதுமக்கள் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில், பல்வேறு பணிகளுக்காக
தோண்டப்பட்ட சாலை, 3 முதல் 6 மாதங்களுக்கு மேலாகியும்
சீரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. சாலைகளில் கொட்டப்பட்ட
ஜல்லிக்கற்கள் கடந்த ஒரு மாதமாக அகற்றப்படாமல் கிடப்பதால்,
அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில்
சிக்குகின்றனர்.
வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பிகள் மிகவும்
தாழ்வாக தொங்கிக்கொண்டிருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து புகார் அளித்து, பல மாதங்களாகியும் அதிகாரிகள் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும்,
தாழ்வான மின் கம்பிகளை மாற்றவும் வலியுறுத்தி, மறியலில்
ஈடுபட்டுள்ளோம் என மக்கள் கூறினர்.
சம்பவ இடத்திற்கு வந்த கரூர்
டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து, தங்களது
போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
