/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கரூரில் 1.89 லட்சம் பெண்கள் உரிமை தொகை பெறுகின்றனர்'
/
'கரூரில் 1.89 லட்சம் பெண்கள் உரிமை தொகை பெறுகின்றனர்'
'கரூரில் 1.89 லட்சம் பெண்கள் உரிமை தொகை பெறுகின்றனர்'
'கரூரில் 1.89 லட்சம் பெண்கள் உரிமை தொகை பெறுகின்றனர்'
ADDED : டிச 13, 2025 05:15 AM
கரூர்: '' கரூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், உரிமை தொகை பெறுகின்றனர்,'' என, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் அருகே தனியார் கலையரங்கில், பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் விரிவாக்க விழா நடந்தது. அதில், உரிமை தொகைக்கான ஆணைகளை பெண்களுக்கு வழங்கிய, கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், ஏற்கனவே ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 729 பெண்கள், உரிமை தொகையாக, 1,000 ரூபாயை மாதந்தோறும் பெறுகின்றனர். தற்போது, 19 ஆயிரத்து, 644 பெண்களுக்கு கூடுதலாக, உரிமை தொகை வழங்கப்படுகிறது. மொத்தமாக, கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 383 பெண்கள் மாதாந்திர உரிமை தொகை பெறுகின்றனர். 100 நாள் வேலை திட்டம், கல்வி திட்டம், ஜல்ஜீவன் திட்டங்களுக்கு மத்திய அரசு, உரிய நிதியை தர மறுக்கிறது. தமிழகம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், மத்திய அரசு, 29 பைசா திருப்பி தருகிறது. ஆனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், ஒரு ரூபாய் வரிக்கு, ஏழு ரூபாய் திருப்பி வழங்கப்படுகிறது.
தமிழகத்துக்கு, மத்திய அரசு குறைந்த நிதியை வழங்கினால் கூட, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். எனவே, தமிழகத்தில் பெண்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற, உறுதியை சொல்லியுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விழாவில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ., க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்

