/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வணிக வங்கியை போல் கூட்டுறவு வங்கி, சங்கத்தில் நகைக்கடன் உயர்த்தி ஒரே வட்டியில் வழங்க கோரிக்கை
/
வணிக வங்கியை போல் கூட்டுறவு வங்கி, சங்கத்தில் நகைக்கடன் உயர்த்தி ஒரே வட்டியில் வழங்க கோரிக்கை
வணிக வங்கியை போல் கூட்டுறவு வங்கி, சங்கத்தில் நகைக்கடன் உயர்த்தி ஒரே வட்டியில் வழங்க கோரிக்கை
வணிக வங்கியை போல் கூட்டுறவு வங்கி, சங்கத்தில் நகைக்கடன் உயர்த்தி ஒரே வட்டியில் வழங்க கோரிக்கை
ADDED : டிச 13, 2025 05:15 AM
மோகனுார்: 'வணிக வங்கிகளை போல், கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்தில், நகைக்கடன் உயர்த்தி, ஒரே வட்டியில் வழங்க வேண்டும்' என, பேட்டப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற பட்டா, சிட்டா, அடங்கல் பெற்றுவர கூறுகின்றனர். பயிர்கடன் பெற அடங்கல் தேவை என்றால், ஏ.எச்.எச்., கால்நடை பராமரிப்பு கடனுக்கு அடங்கல் தேவையில்லை. வி.ஏ.ஓ., அடங்கல் கொடுத்தும், அவற்றை நம்பாமல், பயிருடன், கால்நடைகளுடன் சம்பந்தப்பட்ட விவசாயி நின்று போட்டோ எடுத்து வர அறிவுறுத்துகின்றனர். கால்நடை மருத்துவர் சான்றும் வழங்கப்படுகிறது.சங்கத்தின் விவசாய கடன் பெறும்போதும், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கடனுக்கும், நிலம் உள்ள கிராமத்தில் உள்ள சங்கத்திடம் இருந்து என்.ஓ.சி., கேட்கின்றனர். ஒருமுறை என்.ஓ.சி., பெற்றால் மீண்டும் சம்பந்தப்பட்ட சங்கத்திடம் இருந்து, என்.ஓ.சி., கொடுத்தால் தான் நிலம் உள்ள கிராம சங்கத்தல் கடன் பெறமுடியும். எனவே, என்.ஓ.சி., தேவையில்லை.
வணிக வங்கிகளில், நகை கடன், 7 சதவீதம் வட்டிக்கும், கிராமிற்கு, 8,100 ரூபாய் என, ஒரு பவுனுக்கு, 64,800 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்தில், கிராமிற்கு, 6,000 ரூபாய், ஒரு பவுனுக்கு, 48,000 ரூபாய், முறையே, 12, 10, 11 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கி, சங்கத்தில், நகைக்கடன் உயர்த்தி, ஒரே வட்டியில் வழங்க வேண்டும்.
அனைத்து வணிக வங்கிகளிலும் விவசாய கடன், இரண்டு லட்சம் ரூபாய் வரை, ஜாமின் இல்லாமலும், இரண்டு முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஜாமின் பெற்றும் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல், கூட்டுறவு சங்கங்களிலும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

