/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'
/
மோட்டார் திருட்டு 2 பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 17, 2025 02:46 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வீரணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா, 29; இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், ஐந்து ஹெச்.பி., மின் மோட்டார் பழுதானது. அதனை சரி செய்ய, கழற்றி வீட்டில் வைத்திருந்தார்
. கடந்த, 13ல் மின் மோட்டார் திருடு போனது. இதுகுறித்து சத்யா, அவரது கணவர் பாலமு-ருகன் ஆகியோர், ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்துள்-ளனர். அப்போது, செங்காட்டூரை சேர்ந்த ராஜா, 24, முனிராஜ், 45, ஆகிய இருவரும், டூவீலரில் மோட்டாரை எடுத்து சென்ற-தாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சத்யா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் மின்மோட்டார் திருடிய செங்காட்-டூரை சேர்ந்த ராஜா, முனிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்-தனர்.