/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி
/
வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி
வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி
வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி
ADDED : ஜன 18, 2024 02:03 PM
கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டிகள் இருவர் பலியாகினர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரை சேர்ந்தவர் குஞ்சம்மாள், 90. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள், 80. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேமங்கியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மரவாபாளையம் மதுரை வீரன்நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குணசேகரன்,19, ஓட்டி சென்ற பைக் இருவர் மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.