/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்
/
அரவக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் சிக்கினர்
ADDED : நவ 11, 2024 07:51 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார், மணல்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்றுக்கொண்டிருந்த, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன், 43, என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், எழுநுாற்றுமங்கலம் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் ஆவுடையப்பன், 60, என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.