/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி
/
கார் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி
ADDED : அக் 28, 2025 01:57 AM
கரூர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் பிரவீன், 19, வளையப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 19. இவர்கள், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பிரவீன், மாதேஷ் உள்பட, எட்டு பேர் இனோவா காரில் கோவையில் இருந்து, கரூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.
கோவை-கரூர் சாலை க.பரமத்தி அருகே, காட்டுமுன்னுார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் பிரவீன், மாதேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற ஆறு பேரும் காயமடைந்தனர். தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.---------------------------------

