/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குவாரியில் இருந்து எம்.சாண்ட் கடத்தல் 2 லாரிகளை பிடித்து போலீசில் ஒப்படைப்பு

ADDED : மே 29, 2025 01:27 AM
குளித்தலை, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கல்குவாரி உரிமையாளருக்கு ஆதரவாக, போலீசார் செயல்படுபவதாக கூறி, லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை மணல் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில், அனுமதியின்றி குறிப்பாக கரூரில் அதிகளவு குவாரியில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இச்செயலுக்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையாக இருப்பதாக கூறினர். மேலும் சங்கத்தினர் பிடித்து கொடுத்த இரண்டு லாரிகள் மீது, வழக்கு பதிய முன்வராததால், மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடன்பாடு ஏற்படாததால், சங்க மாநில தலைவர் ராஜாமணி, மாநில செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட, 14 பேரை லாலாபேட்டை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர். பின், அதிகாலையில் இன்ஸ்பெக்டர் சொந்த ஜாமினில் விடுவித்தார்.
இரண்டு டிப்பர் லாரிகளுக்கும், உரிய அனுமதி ரசீது இருந்ததால் விடுவிக்கப்பட்டது.