ADDED : பிப் 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வெங்கமேடு, வேலாயுதம்பாளையத்தில், இரண்டு பெண்களை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கரூர், பெரியாண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி சினேகா, 23; இவர் கடந்த, 3ல் வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கருப்பையா புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
* வேலாயுதம்பாளையம், காந்தி நகர் ஏழாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி ராஜா மகள் கயல்விழி, 24; இவர் கடந்த, 2ல் வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கயல்விழியின் தாய் கோகிலா அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

