/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் நீதிமன்றத்தில் 2,566 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 2,566 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 01:52 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 2,566 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதில், வங்கி சிவில் வழக்கு, காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 2,890 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இறுதியாக, 2,566 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ஒன்பது கோடியே, 91 லட்சத்து, 92 ஆயிரத்து, 68 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கரூரில் நடந்த, மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.