/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூரில் மருத்துவ முகாம் பயனடைந்த 2,983 பேர்
/
புகழூரில் மருத்துவ முகாம் பயனடைந்த 2,983 பேர்
ADDED : மே 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் நடந்த நடமாடும் மருத்துவ முகாமில், 2,983 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், பொதுமக்களின் உடல் நலனை பேணுவதற்காக, தினசரி நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், 50-வது கிராமமான பொன்னியாக்கவுண்டன்புதுாரில், மூன்றாம் மாத மருத்துவ முகாமானது நிறைவு பெற்றது. இங்கு, 896 பேருக்கு மருத்துவ ஆலோசனை, தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடமாடும் மருத்துவ முகாமில், 2,983 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.A

