/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
/
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 08, 2025 12:57 AM
குளித்தலை, 'குளித்தலை அரசு கலை கல்லுாரியில், அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது' என, கல்லுாரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப்படி, 2025-26ம் கல்வியாண்டிற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், இளங்கலை பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பி.காம்.,-பி.பி.ஏ.,-பி.காம்.,(சி.ஏ) மற்றும் பி.ஏ., வரலாறு, பி.காம்., தமிழ் வழி, பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.