4 பேருக்கு கத்திக்குத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு
4 பேருக்கு கத்திக்குத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 30, 2026 05:54 AM
குளித்தலை; திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தெற்கு லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாரத்குமார், 26; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 27 இரவு, 7:00 மணிக்கு, நண்பர்களான நல்லுச்-சாமி, 36, சிவக்குமார், 40, கிஷோர்பாண்டி, 35, ஆகியோர், காணியாளம்பட்டி டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த காணியாளம்பட்டி அடுத்த வேப்பங்குடியை சேர்ந்த செல்லக்காள், 26, கார்த்திக், மோகன் ஆகிய மூவரும் சேர்ந்து, 'எங்க ஊர்லையே வண்டிய வேகமா ஓட்டுறியா' எனக்-கேட்டு, தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து கல், கத்தியால் தாக்-கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பாரத்குமார், நல்லுச்சாமி, சிவக்குமார், கிஷோர்பாண்டி ஆகிய, நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மாயனுார் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசா-ரித்து வருகின்றனர்.
