/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் 3 லட்சம் உறுப்பினர்கள்; செந்தில்பாலாஜி

ADDED : ஜூலை 04, 2025 01:39 AM
கரூர், ''கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில், 3 லட்சம் பேரை தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்
பாலாஜி தெரிவித்தார்.
கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோடங்கிப்பட்டியில், தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதை கரூர் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் தொகுதியில் வீடு, வீடாக சென்று, தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. தமிழ்நாடு மீது, மத்திய அரசு நடத்தி வரும் தாக்குதல் குறித்து எடுத்து சொல்லப்படும். எத்தனை தாக்குதல் வந்தாலும், முதல்வர் ஸ்டாலின் எதிர்கொள்வார். கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதில், மூன்று லட்சம் பேரை, தி.முக.., உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும், 45 நாட்களுக்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.
கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உடனிருந்தார்.