ADDED : ஜூன் 16, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ஆர்.டி.,மலை பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம், 4:00 மணிக்கு, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆர்.டி.,மலை தெற்குதெருவை சேர்ந்த வேலு, 62, கீழவெளியூர், எம்.ஜி.ஆர்., நகர் ராஜேந்திரன், 34, திருச்சி, தில்லை நகர் மணிகண்டன், 36, ஆகிய மூன்று பேர், வெள்ளை துண்டு சீட்டில் லாட்டரி எண்களை எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த தோகைமலை போலீசார், 16,810 ரூபாய் பறிமுதல் செய்தனர்.