/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு
/
முதுநிலை ஆசிரியர் தேர்வு 3,724 பேர் பங்கேற்பு
ADDED : அக் 13, 2025 02:20 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலை பரணி பார்க் மெட்ரிக் பள்ளி, சேரன் மெட்ரிக் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி, கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்-பட, 15 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முது-கலை ஆசிரியர் தேர்வு, நேற்று நடந்தது. இங்கு, 3,914 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 3,724 பேர் தேர்வு எழுதினர். 190 பேர் தேர்வு எழுத வர-வில்லை. காலை, 10:00 மணி முதல், 1:30 மணி வரை தேர்வு நடந்தது.
இதனால், தேர்வு மையத்திற்கு காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்கு பின் வந்தவர்கள், தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட-வில்லை.
தேர்வறைக்குள் மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், கையேடுகள் போன்றவற்றை கண்டிப்பாக அனுமதிக்கப்படவில்லை.