/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் யூனியனில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை
/
கரூர் யூனியனில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை
கரூர் யூனியனில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை
கரூர் யூனியனில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை
ADDED : அக் 13, 2025 02:19 AM
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்ச-ருமான செந்தில்பாலாஜி பூமி பூஜைை தொடங்கி வைத்தார்.
கரூர், காதப்பாறை பஞ்., அன்பு நகரில், 64.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை மேம்பாட்டு பணி, பிரேம் நகரில், 26.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மேம்பாட்டு பணியையும், வேடிச்சிபாளையம் காட்டுத்தெருவில், 16.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்ச்சாலை அமைக்கும் பணி, புல்-லாகவுண்டன்புதுாரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, 60,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, அரசு காலனி காந்தி நகர் 2, 4-வது தெருக்களில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணி என, மொத்தம், 4.85 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.