ADDED : நவ 16, 2026 07:09 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 25; பேக்கரி
தொழிலாளி. இவரது மனைவி சுந்தரவல்லி, 23, ஒன்றரை மகன் புகழ்வேலன்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, வீட்டிலிருந்த
மனைவி, மகனை காணவில்லை. அக்கம் பக்கத்தினம் மற்றும் உறவினர்களிடம்
விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து முருகேசன்
அளித்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
குளித்தலை
அடுத்த கருங்களாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியக்காள், 45;
கூலித்தொழிலாளி. இவரது மகள் மகாலட்சுமி, 19, முசிறி தனியார்
கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுமுறை
என்பதால், நேற்று முன்தினம், தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து
கொண்டிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர் குறித்து எந்த
தகவலும் கிடைக்காததால், தாய் பெரியக்காள் அளித்த புகார்படி,
குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம் பெண் மாயம்
குளித்தலை
அடுத்த பொருந்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா, 45; இவரது மகள்
நிவேதா, 19. இவர், தோகைமலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து
வந்தார். கடந்த, 13 காலை, 8:00 மணிக்கு, வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
பின், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும்,
விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தாய் சித்ரா அளித்த
புகார்படி, தோகைமலை போலீசார்விசாரிக்கின்றனர்.
