/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது
/
லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது
லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது
லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது
ADDED : நவ 26, 2024 01:07 AM
லாலாபேட்டை அருகே பணம் பறிப்பு
நாடகமாடிய டிரைவர் உள்பட 4 பேர் கைது
?????, ??. 26?
கரூர், நவ. 26-
லாலாப்பேட்டை அருகே, பணம் பறிப்பு விவகாரத்தில் நாடகமாடிய, சரக்கு வேன் டிரைவர் உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் பீடி, சிகரெட்டுகளை விற்பனை செய்யும் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் கடந்த அக்.,13ல் லாலாப்பேட்டை பகுதியில், விற்பனை முடித்து சரக்கு வேனில் ஊழியர்கள் வசூல் செய்த, பணத்துடன் திரும்பி கொண்டிருந்தனர். சரக்கு வேனை, கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பாஸ்கர், 35, ஓட்டியுள்ளார். சரக்கு வேன் லாலாப்பேட்டை அருகே, பூலாம்பட்டி நான்கு சாலை பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டூவீலரில் வந்தவர்கள் சரக்கு வேனை மறித்து, 3.87 லட்ச ரூபாயை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்த போது, பணத்தை பறித்தவர்கள் சரக்கு வேன் டிரைவர் பாஸ்கரின் நண்பர்கள் என்பதும், பணத்தை பறித்து செல்ல பாஸ்கர் உடந்தையாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வேன் டிரைவர் பாஸ்கர், பாகநத்தத்தை சேர்ந்த தரண்ராஜ், தமிழரசன், கரூர் வ.உ.சி., தெருவை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய, நான்கு பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.