ADDED : அக் 24, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே மழைநீர் சூழ்ந்ததால், வீட்டுக்குள் சிக்கிய, நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கரூர்
மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை
பெய்தது. இதில் கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெங்கடாபுரத்தில் உள்ள
வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. அதில், ஒரு வீட்டில் இருந்த நான்கு
பேர் வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக, கரூர் தீயணைப்பு
வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கடாபுரத்துக்கு
சென்ற தீயணைப்பு வீரர்கள், வீட்டுக்குள் தவித்து கொண்டிருந்த அமுதா,
60, ராதா, 39, அகிலன், 11, ஸ்ரீஜா, 9, ஆகிய நான்கு பேரை பத்திரமாக மீட்டனர்.
