/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோட்டில் 4 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு
/
ஈரோட்டில் 4 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு
ADDED : ஆக 10, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில், நேற்று காலை அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் ஈரோடு நோக்கி சென்றது. கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே, ஆம்புலன்சுக்கு வழிவிட முயன்ற போது, சரக்கு ஆட்டோ மற்றொரு சரக்கு ஆட்டோ மீது மோதியது.
அந்த சரக்கு ஆட்டோ, முன்னே சென்ற ரெட் டாக்சி கார் மீது மோதியது. இதில் இழுத்து சென்ற ரெட் டாக்சி கார், தனக்கு முன் சென்ற மினி ஈச்சர் லாரியில் மோதியது. இதில் வாகனங்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.