/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் 4 வயது சிறுமி உலக சாதனை
/
18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் 4 வயது சிறுமி உலக சாதனை
18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் 4 வயது சிறுமி உலக சாதனை
18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் 4 வயது சிறுமி உலக சாதனை
ADDED : டிச 08, 2025 09:07 AM

கரூர்: கரூரை சேர்ந்த, 4 வயது சிறுமி, 18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் செய்து, உலக சாதனை படைத்-துள்ளார்.
கரூர், எல்.ஜி.பி., நகரில் வசித்து வரும் அருண் கார்த்திகேயன், ரோஷினி தம்பதியரின் மகள் மகாசினி, 4; அதே பகுதியில் உள்ள தனியார் பள்-ளியில், பிரீ கே.ஜி., படித்து வருகிறார். இவர், கடந்த ஓராண்டாக ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடு-பட்டு வருகிறார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் எதிரில் உள்ள கிங்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமியில், ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அங்கு, 100 மீட்டர் ஸ்கேட்டிங் வளையத்தில், 186 முறை சுற்றி, 18.6 கி.மீ., துாரம் ஸ்கேட்டிங் செய்து, 'அர்ஜுனா' உலக சாதனையில் இடம்பி-டித்துள்ளார். இந்த நிகழ்ச்சி- அர்ஜுனா உலக சாத-னையின் இயக்குனர் ராஜா கோபிநாத், நிர்வாகி பிரேமா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அவருக்கு அர்ஜுனா உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

