தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/4,720 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பம்: கலெக்டர்

4,720 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பம்: கலெக்டர்

4,720 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பம்: கலெக்டர்


ADDED : ஜூன் 25, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:''அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, 4,720 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர்,'' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் முத்துக்குமரன் பேசியதாவது:

மாவட்டத்தில் 2025--26ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 59 அரசு பள்ளிகளில் பயின்ற, 5,251 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதில், 4,814 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 4,720 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த, 303 பேரில், 298 மாணவ, மாணவியர் துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் கள ஆய்வு செய்து, தலைமை ஆசிரியர் மற்றும் உயர் கல்வி ஆசிரியருடன் ஆலோசனை மேற்கொண்டு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும், உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லுாரியில் சேர்க்கை நடைபெறும் வரை கண்காணித்தும், துணை தேர்வு எழுதிய மாணவர்களை கண்காணித்து, அவர்களையும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்திட வேண்டும். மேலும், உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, பெற்றோர் முன்னிலையில் கள ஆய்வு செய்து, அவர்களையும் உயர்கல்வி சேர்ந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட கல்வி அலுவவர் (இடைநிலை) சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us