தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சியில் நீச்சல் குளம் மாணவர்கள் வேண்டுகோள்

அரவக்குறிச்சியில் நீச்சல் குளம் மாணவர்கள் வேண்டுகோள்

அரவக்குறிச்சியில் நீச்சல் குளம் மாணவர்கள் வேண்டுகோள்


ADDED : ஜூன் 25, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:கரூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும், சிறப்பு நிலை பேரூராட்சியான அரவக்குறிச்சியில், நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மாணவர்களுக்கான, குறுவட்ட மைய விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அவற்றில் நீச்சல் போட்டியும் இடம் பெறுகிறது. ஆனால், கிராமப்புற மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள, கரூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கரூர் நீச்சல் குளத்தில், மாணவர்கள் அதிகளவில் பதிவு செய்திருப்பதால், அனைவருக்கும் போதிய பயிற்சி வாய்ப்பு கிடைப்பதில்லை என, பெற்றோர் கூறுகின்றனர்.

கரூருக்கு சென்று வருவதால் போக்குவரத்து செலவு ஏற்படுவதுடன், நேர விரயமும் அதிகமாகிறது. எனவே, மாணவர்கள் உள்ளூரிலேயே நீச்சல் பயிற்சி பெற, அரவக்குறிச்சியில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும். அதன் மூலம், மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதோடு, தங்கள் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

எனவே மாணவர்கள், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, அரவக்குறிச்சியில் விரைவில் நீச்சல் குளம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us