/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடம்பவனேஸ்வரர் கோவிலில் 48 வது நாள் மண்டலாபிஷேகம்
/
கடம்பவனேஸ்வரர் கோவிலில் 48 வது நாள் மண்டலாபிஷேகம்
ADDED : ஆக 30, 2024 01:50 AM
குளித்தலை,ஆக.30-
குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில், 48வது நாள் மண்டலாபிஷேகத்தில், 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவில், 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில், சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. பின், புனரமைப்பு பணிகள் நடைபெற்று கடந்த ஜூலை, 12ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நேற்று, 48 வது நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், கடம்பவனேஸ்வரர் (மூலஸ்தானம்) ஆகிய பரிவார தெய்வங்களுக்கு, 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. குளித்தலை சுற்று பகுதி கிராமத்தை சேர்ந்த சிவனடியார்கள், கோவில் புரவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

