'சென்ட்ரிங்' சீட் திருட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு
'சென்ட்ரிங்' சீட் திருட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 05, 2026 05:12 AM
கரூர்:வெள்ளியணை அருகே, 'சென்ட்ரிங்' சீட்களை திருடியதாக, ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்
ஆண்டாங்கோவில், ராஜா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார், 54; கட்டட
தொழிலாளி. இவர் வெள்ளியணை அருகே, ஏமூர் பகுதியில் உள்ள ஒரு
கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம், 28ல் கட்டடத்தில்
வேலை முடிந்த பின், செந்தில் குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள்
காலை கட்டடத்துக்கு சென்று பார்த்தபோது, 58,000 ரூபாய் மதிப்புடைய,
40 சென்ட்ரிங் சீட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி
சென்றுவிட்டனர். இது குறித்து, செந்தில்குமார், வெள்ளியணை போலீசில்
புகாரளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், 'சென்ட்ரிங்'
சீட்களை திருடியது சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த இரும்பு வியாபாரி
முத்து பாலாஜி, 22, ராயனுாரை சேர்ந்த நிதிஷ், 18, ராமகிருஷ்ணபுரத்தை
சேர்ந்த ஹரிராம், 20, மற்றும், 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்பட,
ஐந்து பேர் என தெரியவந்தது. ஐந்து பேர் மீதும் வெள்ளியணை போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
