ADDED : அக் 05, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
குளித்தலை,:குளித்தலை
அடுத்த சேங்கல் பஞ்., மேலடை தாமரைக்குளம் பாறை அருகே, கடந்த, 2 மாலை,
4:00 மணிக்கு, அரசு அனுமதியின்றி போர்வெல் போட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது,
ஆதனுாரை சேர்ந்த கோபிநாத், 29, கொடுத்த புகார்படி, போர் போடும் பணியில்
ஈடுபட்டிருந்த திருநாவுக்கரசு மற்றும் மதுரை செங்கல் பகுதியை
சேர்ந்த இருவர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த, மூன்று பேர் என, ஆறு பேர்
மீது மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
