/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
54-வது ஆண்டு தொடக்க விழா அ.தி.மு.க.,வில் கொண்டாட்டம்
/
54-வது ஆண்டு தொடக்க விழா அ.தி.மு.க.,வில் கொண்டாட்டம்
54-வது ஆண்டு தொடக்க விழா அ.தி.மு.க.,வில் கொண்டாட்டம்
54-வது ஆண்டு தொடக்க விழா அ.தி.மு.க.,வில் கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2025 01:20 AM
பெருந்துறை, அ.தி.மு.க., சார்பில் கட்சியின், 54-வது ஆண்டு தொடக்க விழா, பெருந்துறையில் நேற்று கொண்டாடப்பட்டது. பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சார்பில் பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த நிகழ்வில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., உருவப்படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார்.
விழாவில் பெருந்துறை நகர செயலாளர் கல்யாணசுந்தரம், நல்லம்பட்டி நகர செயலாளர் துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், மகளிர் அணி உமா நல்லசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.