/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
6,657 பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு: கலெக்டர் தகவல்
/
6,657 பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு: கலெக்டர் தகவல்
6,657 பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு: கலெக்டர் தகவல்
6,657 பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு: கலெக்டர் தகவல்
ADDED : நவ 28, 2025 01:20 AM
கரூர், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம், 6,657 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வாரியாக தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. பல்வேறு கல்வித் தகுதி உடையவர்களுக்கான (8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் இன்ஜினியரிங், பட்டப் படிப்பு வரை) வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த, 2021 முதல் 2025 வரை, 4 ஆண்டுகளில் 10 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 65 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் என மொத்தம் 75 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில், 1,868 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 6,657 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுடைய சுய விபர குறிப்பு, உரிய கல்விச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04324-223555 மற்றும் 9499055912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

