/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
/
மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
ADDED : நவ 28, 2025 01:21 AM
கரூர், கரூரில், மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைக்கு அடுத்தபடியாக, மரவள்ளி கிழங்கு அதிகளவில் நடவு செய்யப்படுவது வழக்கம். தற்போது, 2,807 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மரவள்ளி கிழங்கு நடவு செய்வது என்பது கரும்பு, வாழை உள்ளிட்டவற்றிற்கு செய்யும் செலவை காட்டிலும் கூலி ஆட்கள் செலவு குறைவு. நெல், கரும்பு உள்ளிட்டவற்றிக்கு தண்ணீர் தேவை அதிகம். ஆனால் மரவள்ளி கிழங்கிற்கு தண்ணீர் தேவை குறைவு என்பதால், கிணற்று நீர் பாசன மூலம் சாகுபடி நடந்து
வருகிறது.
மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

