ADDED : அக் 26, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கழுகூர் பஞ்., உடையாபட்டி சமுதாயக்கூடம் அருகே, பணம் வைத்து
சூதாடுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து
எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம்
மதியம், சம்பவ இடத்தை கண்காணித்தனர். அப்போது பணம் வைத்து சீட்டு
விளையாடிக்கொண்டிருந்த சங்காயிபட்டி பழனிச்சாமி, 59,
ராக்கம்பட்டி பொன்னுச்சாமி, குண்ணாகவுண்டம்பட்டி மாணிக்கம், 52,
அ.உடையாபட்டி சசி, 27, செந்தில், 40, நாகராஜ், 27, பாலு, 40, ஆகிய, ஏழு
பேரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
