தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாட்டிலால் தாக்கி விவசாயிக்கு மிரட்டல்

பாட்டிலால் தாக்கி விவசாயிக்கு மிரட்டல்

பாட்டிலால் தாக்கி விவசாயிக்கு மிரட்டல்


ADDED : அக் 26, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த வடசேரி, சூரிய நகரை சேர்ந்தவர் குமரவேலு, 50; விவசாயி. இவர், கடந்த, 23 மாலை, 11:00 மணிக்கு, சமுதாயக்கூட மாடியில் படுத்து துாங்கி உள்ளார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போனை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

துாங்கி எழுந்து பார்த்தபோது மொபைல் போனை காணாததால், அருகில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விஜய், 19, என்பவர் வந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஜியிடம், மொபைல் போனை எடுத்திருந்தால் கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், பீர் பாட்டிலால் குமரவேலுவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த குமரவேலு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, தோகைமலை போலீசார் விஜய் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us