/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில நல்லாசிரியர் விருது கரூர் மாவட்டத்தில் 7 பேர் தேர்வு
/
மாநில நல்லாசிரியர் விருது கரூர் மாவட்டத்தில் 7 பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது கரூர் மாவட்டத்தில் 7 பேர் தேர்வு
மாநில நல்லாசிரியர் விருது கரூர் மாவட்டத்தில் 7 பேர் தேர்வு
ADDED : செப் 04, 2025 01:26 AM
கரூர், :மாநில நல்லாசிரியர் விருதுக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து, 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5 அன்று, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி வருகிறது.
விருது பெறுபவர்களுக்கு, 10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான ஆசிரியர்களை மாநிலக் குழுவுக்கு, மாவட்ட குழுக்கள் பரிந்துரை செய்தன. அந்த பட்டியலில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு தொடக்க, நடுநிலை பள்ளிக்கு, 3 பேரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு, 3 பேரும், தனியார் பள்ளிக்கு ஒருவர் என மொத்தம், 7 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செயய்யப்பட்டுள்ளனர்.
இதில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரபாளையம் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேவி, தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கோயம்பள்ளி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கபாண்டி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், கன்னம்முத்தம்பட்டி பட்டதாரி ஆசிரியர் செல்வராசு, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் மனோகரன், ஆண்டிப்பட்டிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ரவிசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, கரூர் வெண்ணைமலை பரணி பார்க் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் நாளை நடக்கவுள்ள விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளார்.