/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
79,370 விவசாயிகளிடம் தரவுகள் சேகரிப்பு கரூர் கலெக்டர் தகவல்
/
79,370 விவசாயிகளிடம் தரவுகள் சேகரிப்பு கரூர் கலெக்டர் தகவல்
79,370 விவசாயிகளிடம் தரவுகள் சேகரிப்பு கரூர் கலெக்டர் தகவல்
79,370 விவசாயிகளிடம் தரவுகள் சேகரிப்பு கரூர் கலெக்டர் தகவல்
ADDED : பிப் 16, 2025 03:20 AM
கரூர்: 'வேளாண் அடுக்ககம் திட்டத்தில் மாவட்டத்தில், 79,370 விவ-சாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் வேளாண் அடுக்ககம் திட்-டத்தில், விவசாயிகளிடம் தரவுகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. இது பற்றி கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் ஒருங்கி-ணைந்த விவசாயிகளிடம் தரவுகள் சேகரிக்கும் பணி வேளாண் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகளை சேகரிக்கும் பணி-யினை மேற்கொள்ள வேளாண்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உட்பட, 101 அலு-வலர்கள், மகளிர் திட்டத்தில் கிராம அளவிலான, 142 சமுதாய வள பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி-புரியும், 185 பணியாளர்கள் உள்பட மொத்தம், 428 பணியாளர்-களை ஒருங்கிணைத்து தரவுகள் சேகரிக்கும் பணியை கிராம அளவில் மேற்கொள்கின்றனர். இப்பணிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பஞ்., அலுவல-கத்தில் நடக்கிறது.
மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உள்ளது போல் விவசாயிகளுக்கென தனி குறியீடு எண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அவர்களது தரவுகள் சேகரிக்கப் படுகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின், 13 துறை சம்பந்தமான திட்ட பலன்கள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கப்பெற உதவு-கிறது. இனிவரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசு-களின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையில் அனைத்து துறை பயன்களும், மானியங்களும் ஒற்றை சாளர முறையில் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம். இதன்படி, மாவட்டத்தைச் சோர்ந்த, 79,370 விவசாயிகளின் தர-வுகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. முகாமிற்கு வரும்போது ஆதார் அட்டை, பட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து கொள்-ளலாம். பதிவு செய்யும் பணி முடிந்தவுடன் விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர், கூறினார்.
ஆய்வின்போது வேளாண் மாவட்ட இணை இயக்குனர் சிவா-னந்தம், வேளாண் உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்-பாடு) பார்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஆறுமுகம், வேளாண் உதவி இயக்குநர் காதர்மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

