எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் 8 மணி நேர 'ஹேக்கத்தான்' போட்டி
எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியில் 8 மணி நேர 'ஹேக்கத்தான்' போட்டி
ADDED : ஜூன் 08, 2026 04:53 AM

கரூர்:கரூர்,
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், எச்.சி.எல்.டெக் நிறுவனம்
சார்பில், 8 மணி நேர, 'ஹேக்கத்தான்' போட்டி நடந்துது.
கல்லுாரி தலைவர்
ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த
இறுதியாண்டு மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களின்
தொழில்நுட்ப திறன்களையும், புதுமையான யோசனைகளையும் மதிப்பீடு
செய்வதற்காக, எச்.சி.எல்.டெக் நிறுவனத்தின் தலைச்சிறந்த மென்பொருள்
வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.ஹேக்கத்தானில் பங்கேற்று தங்களது
மென்பொருள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவ,
மாணவியருக்கு, எச்.சி.எல்.டெக் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி மற்றும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை
செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல்
இயக்குன குப்புசாமி முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவர்
சரவணன் மாணவர்கள் நலத்துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் மேற்கொண்டனர்.
