ADDED : ஜூன் 08, 2026 04:53 AM
கரூர்:கரூர்,
லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து பழைய திண்டுக்கல் சாலை வழியாக ஜவஹர்
பஜார், மார்க்கெட், மாரியம்மன் கோவில் ரயில்வே ஸ்டேஷன் போன்ற பல்வேறு
பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையின் இருபுறமும்
அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும்,
திரையரங்கமும் உள்ளன. இதுபோன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு வரும்
கனரக வாகனங்கள் நீண்ட நேரம் சாலையோரம் நிறுத்தப்படுவதால், பிற
வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால், மாற்று வழியில்
செல்ல வேண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.கரூர் மாநகர பகுதியில்
கனரக வாகனங்கள் வந்து செல்ல பல்வேறு நேர கட்டுப்பாடுகளை
போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். சில மாதங்களில் போலீஸ்
உத்தரவு காற்றில் பறந்து விடுகிறது. இந்த கனரக வாகனங்களால் காலை,
மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த
நெரிசலை குறைக்க, போககுவரத்து சரி செய்ய எதிர்பார்க்கின்றனர்.
