/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டவிரோதமாக விற்பனை 80 மது பாட்டில் பறிமுதல்
/
சட்டவிரோதமாக விற்பனை 80 மது பாட்டில் பறிமுதல்
ADDED : நவ 20, 2025 02:47 AM
அரவக்குறிச்சி, தென்னிலை போலீசார் கருஞ்செல்லிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்ற நொய்யல் பங்களா நகரை சேர்ந்த தினேஷ், 41, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, ரூ.3,900 மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* சின்னதாராபுரம் போலீசார், பங்களா பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற, சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி, 54, என்பவரிடமிருந்து, ரூ.4,000 மதிப்புள்ள, 27 மது பாட்டில்களும், இதே போல சின்னதாராபுரம் அருகே உள்ள ரங்கபாளையம் டாஸ்மாக் கடை அருகே, மது விற்ற திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே துமிச்சிபட்டியை சேர்ந்த மணி, 37, என்பவரிடமிருந்து, ரூ..4,000 மதிப்புள்ள, 27 மதுபாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

